குழந்தையைப் பெறுவது குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அந்த பெரும்பாக்கியத்தை அடைய சிசு மருத்துவமனை உங்களுக்கு உதவுகிறது. சிறந்த தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் அக்கறையுள்ள ஊழியர்களுடன், உலகத்தரம் வாய்ந்த ICSI சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம். செயற்கை கருத்தரித்தல் என்பது ஒரு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஆகும், இது பொதுவாக “சோதனைக் குழாய் முறை” என்று அழைக்கப்படுகிறது.
ICSI என்பது ஒரு வகை ART. இந்த முறையில் ஒற்றை விந்தணு, நேரடியாக முட்டையின் உள் செலுத்தப்பட்டு கர்ப்பம் உருவாக்கப்படுகிறது. இந்த முறை பொதுவாக ஆண் காரணி கருவுறாமைக்காக (Azoospermia) கண்டு பிடிக்கப்பட்டாலும், இப்பொழுது இது பல காரங்களுக்காக செய்யப்படுகிறது.
இதில் பெண்களுடைய முட்டையை Trans vaginal ultrasound உதவியுடன் எடுக்கப்படுகிறது.ஆண் உயிரணுக்களை நேரடியாக இனப்பெருக்க குழாயிலிருந்து எடுத்து அல்லது சுத்தம் செய்த அணுக்களிலிருந்து எடுத்து, முட்டைக்குள் நேரடியாக Micro Manipulator என்ற கருவில் வளர்த்து, பின்பு கரு பிளஸ்ட்டோ சிஸ்ட் என்ற நிலையை அடைந்தவுடன் கர்ப்பபையில் செலுத்தப்பட்டு கர்ப்பம் செய்யப்படுகிறது.
இதுமட்டும் அல்ல, பல புதிய நவீன தொழில் நுட்பங்கள் Stem cell culture, Embryo Binding methods, பல முறை TEST TUBE BABY-யில் தோல்வியுற்றவர்களுக்கு “Special Pre-Implantation Assessment Method”, IMCI, Pre-Genetic Diagnosis போன்ற பல தொழில்நுட்பங்கள் அனுபவம்மிக்க மருத்துவர்களால் செயல்படுத்தப்பட்டு வெற்றியின் சதவிகிதத்தை அதிகரிக்கப்படுகிறது.